ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளியானபோது வெற்றி பெற்ற படமாகும். அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் நயன்தாரா மீண்டும் அம்மனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இவருடன் துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா மற்றும் ராமச்சந்திர ராஜு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுந்தர்.சி மற்றும் நயன்தாரா இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இத்தகவலை இயக்குநர் சுந்தர்.சி முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறியபோது, “எனக்கும் நயன்தாராவுக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இப்படி ஒரு தகவல் எப்படி பரவியது என்பதே எனக்குப் புரியவில்லை. நயன்தாரா ஒரு மிகவும் ஒழுக்கமான நடிகை. படப்பிடிப்பில் ஒரு அரைமணிநேரம் ஓய்வு இருந்தாலும் கூட, அவர் தனது கேரவனில் செல்வதில்லை. எங்களுடன் படப்பிடிப்பு இடத்தில் அமர்ந்திருப்பார். இந்த மாதிரியான கிசுகிசுக்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது” என்று தெளிவாக கூறியுள்ளார்.