இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் வீடியோவில் பேசும் போது, ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்தும் அவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக ஒரு சிங்கிள் லைனில் நான் ஒரு கதையை உருவாக்கினேன். அது ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி அரசியல்வாதியாக மாறும் ஒரு கதையாக இருந்தது. அந்தக் கதையை ஷங்கர் சார் அவர்களிடம் கொடுத்தபோது, அது எவ்வாறு ஒரு பிரம்மாண்டமான படம் ஆகும் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். அந்த அளவுக்கு அவர் செய்யும் படங்களைப் பற்றிய என் பார்வை இருந்தது. ஆனால் ‘கேம் சேஞ்சர்’ மாறுபட்ட ஒரு உலகமாக மாறிவிட்டது.
பல எழுத்தாளர்களும் இதில் வேலை செய்தனர். திரைக்கதையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. கதையில் கூட சில மாற்றங்கள் வந்தன. எப்படியிருந்தாலும், ஒரு படம் ஏன் வெற்றி பெறுகிறது அல்லது ஏன் அது ரசிகர்களிடம் கனெக்ட் ஆகவில்லை என்பதைக் கூறுவது மிகவும் கடினம் என கூறியுள்ளார்.