விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இப்படம் 2018-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். திரைப்படம் வெளியானபோது பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இந்த சூழ்நிலையிலேயே, 5 ஆண்டுகள் கழித்து இந்த இயக்குநரும் நடிகரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். புதிய படத்தின் கதை மலேசியாவில் நடைபெறுவதால், அதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மலேசியாவில் தொடங்கப்பட்டது. முழு படப்பிடிப்பும் அங்கேவே பரபரப்பாக நடைபெற்று நிறைவடைந்துவிட்டது.
விஜய் சேதுபதியின் 51-வது படமான ‘ஏஸ்’ தற்போது இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறது. இதில் அவர் பல வகையான கெட்டப்புகளில் நடித்துள்ளார். மேலும், அவருடன் ஒவ்வொரு காட்சியிலும் தொடரும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளவர் ஜஸ்டின் பிரபாகரன்.
இண்மையில் ‘ஏஸ்’ படத்தின் முதல் பாடலாக ‘உருகுது உருகுது’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பாடலின் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். பாடலை கபில் கபிலன் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர்.இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படம் மே 23ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.