பிரியங்கா மோகன், சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அவர், ஒரு பதிவு போட்டு உள்ளார்.அதில், துருக்கி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு இப்போதுதான் நனவாகி இருக்கிறது. அந்த நாட்டின் அற்புதமான கடற்கரையில் ஏராளமான அதிசயங்கள் இருந்தன. அங்குள்ள ஒவ்வொரு நகரமும் பல மாயாஜாலங்களைக் கொண்டு இருக்கிறது. அவற்றை நான் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் கண்டு ரசித்தேன். இந்த பயண அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது அப்படியொரு அற்புதமான பயணம் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். பிரியங்கா மோகனின் இந்த பதிவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் லைக் செய்துள்ளார்கள் .
