நடிகர் சூர்யா தனது 44-வது திரைப்படமாக ‘ரெட்ரோ’வில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இத்திரைப்படத்தை சூர்யாவின் 2D எனும் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் எனும் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.

‘ரெட்ரோ’ திரைப்படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் பேசும் போது, “சூர்யா நடிப்பு துறையில் நிச்சயமாக பெரிய ஆளாக வருவார் என ஜோதிடர் கூறியபோது நாங்கள் நம்பவே இல்லை. ஆனால் சூர்யா ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம் என நினைத்தார். பின்னர், மணிரத்னம் தயாரித்து வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்துக்காக லுக் டெஸ்டுக்கு சென்றார்.
படம் வெற்றியடைந்ததும், மணிரத்னம் மற்றும் வசந்திடம் பாதம் தொட்டு நன்றி தெரிவித்தோம். மேலும் சூர்யாவை வைத்து இயக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்,” என தெரிவித்தார்.இதனிடையே, ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘Love Detox’ பாடலை சூர்யா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு சூர்யா மற்றும் ஷ்ரேயா இணைந்து நடனமாடியிருப்பதும் முக்கிய அம்சமாக உள்ளது.