நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படமான ‘ரெட்ரோ’வை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படம் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியத்தால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி 48 நிமிடங்கள் ஓடும் படமாக இது உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை ‘பிரேமம்’ படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தான் எடிட்டிங் செய்துள்ளார் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.