Touring Talkies
100% Cinema

Thursday, April 17, 2025

Touring Talkies

வடிவேலு சார் என்றும் நடிப்பில் ‘லெஜண்ட்’ தான் – நடிகர் சுந்தர் சி! #GANGERS

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இந்த படத்தில் சுந்தர்.சி உடன் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை கேத்தரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர்.சி, வடிவேலு பற்றி பேசும்போது, நானும் வடிவேல் சாரும் சேர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். 2003ஆம் ஆண்டு அவர் உடன் எனது பயணம் தொடங்கியது. ஒரு நடிகர் இவ்வளவு நயமான நடிப்பை வெளிப்படுத்த முடியுமா என அவர் நடிப்பை பார்த்து இன்றும் நான் ஆச்சரியப்படுகிறேன். ஒரு சாதாரணக் காட்சியிலும் அவர் தரும் முகபாவனை, உணர்வு மிகச் சிறப்பாக இருக்கும். நடிப்பில் ‘லெஜண்ட்’ என அழைக்கக்கூடியவர் அவர் தான்.

ஒரு காட்சிக்காக நான் 10 சதவிகிதம் யோசித்தால் போதும். மீதமுள்ள 90 சதவிகிதத்தையும் அவர் தன் நடிப்பால் அந்த காட்சியை பிரமிப்பாக மாற்றி விடுகிறார். அதனால் எல்லா நடிகர்களுக்கும் இவர் ஒரு மாஸ்டர் க்ளாஸ் என்பதுதான் என் எண்ணம். ஒரே மனிதர் பல வருடங்களாக அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பது சாதாரண விஷயம் இல்லை.

அவர் இன்னும் 100 ஆண்டுகள் அனைவரையும் சிரிக்கவைத்து மகிழ்விக்க வேண்டும். இந்தப் படத்தில் அவர் உடன் பணியாற்றியபோது நான் ஒரு இயக்குநராக இல்லாமல், ரசிகனாக அவரைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரே வருத்தம் இருந்தது. அது அவர் நடிப்பில் சிறிது கால இடைவெளி எடுத்துவிட்டது என்பதுதான். அந்த இடைவெளியில் அவர் நடித்திருந்தால் இன்னும் அதிகப்படங்களை நாமரசியிருக்க முடிந்திருக்குமென நினைக்கிறேன். இனிமேல் அனைவரும் ‘சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது’ என்று அவரைப் பார்த்து சொல்ல வேண்டும்” என மிகுந்த உணர்வுடன் அவர் பேசியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News