Touring Talkies
100% Cinema

Tuesday, April 15, 2025

Touring Talkies

உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபு… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தேவ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்குகிறார். உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் இப்படம் ஒரு அழகான காதல் கதையுடன் தொடர்கிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவமுள்ள ராஜ்மோகன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படம், சென்னையில் இரும்புக் கடையில் பணியாற்றும் நடுத்தர வர்க்க இளைஞனின் வாழ்க்கையை மற்றும் அவனது காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகிறது.

நகைச்சுவை நடிகராக புகழ்பெற்ற யோகிபாபு, இதில் காதல் நாயகனாகவும், உணர்ச்சிப்பூர்வமான புதிய பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். அவருடன் அனாமிகா மகி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இயக்குநர் லெனின் பாரதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்ஷ்மன் உள்ளிட்டோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘ரைட்டர்’, ‘தண்டகாரண்யம்’ படங்களின் ஒளிப்பதிவாளரான பிரதீப் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ‘கோட்’, ‘அமரன்’ படங்களின் கலை இயக்குநராக செயல்பட்ட சேகர், இந்த படத்திற்கும் கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் வடிவமைக்கிறார். ‘பருத்திவீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ போன்ற படங்களுக்கு உடை வடிவமைத்த நட்ராஜ், இப்படத்திற்கும் உடை வடிவமைப்பை மேற்கொள்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News