தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவையும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வருபவர் நடிகர் பிரேம்ஜி. சமீபத்தில் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு, பிரேம்ஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வல்லமை’ ஆகும்.
இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளவர் கருப்பையா முருகன். இப்படத்தை தயாரித்தது பேட்லர்ஸ் சினிமா நிறுவனம். இந்த படத்தில் பிரேம்ஜியுடன் இணைந்து திவ்ய தர்ஷினி மற்றும் தீபா சங்கர் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த ‘வல்லமை’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.இந்நிலையில், ‘வல்லமை’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.