பல படங்களில் பிஸியாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மீனாட்சி சவுத்ரி அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியானது. அதபோன்று தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தினருடன் வந்த சாமி தரிசனம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், திரை பிரபலங்கள் மகேஷ் பாபு, வெங்கடேஷ், ஜூனியர் என்டிஆர், ராஜமெளலி, அஜித், வெங்கட் பிரபு, நயன்தாரா, பூஜா ஹெக்டே வரிசையில் தற்போது மீனாட்சி சவுத்ரியும் இணைந்திருக்கிறார். பிரபலங்கள் பலரும் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து தனது படத்திற்கான புரோமோஷனையும் தேடுவார்கள். அதேபாணியில் மீனாட்சி சவுத்ரியும் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கோட் பட்ததிற்கு பிறகு தமிழ்நாட்டு பக்கமே வராத மீனாட்சி சவுத்ரியை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழ் பக்கம் வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more