நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில், வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் பெண்கள் பலர், பயந்து கொண்டே இருக்கிறார்கள். கணவரை பார்த்து பயப்படுகிறார்கள். மாமனார், மாமியாரை பார்த்து பயப்படுகிறார்கள். தவறு ஏதாவது செய்திருந்தால் அவர்களிடம் சொன்னால் திருத்திக் கொள்வார்கள். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் பயம், அந்த பெண்ணை தொடர்ந்து பொய் சொல்ல வைத்துக் கொண்டே இருக்கிறது. தன்னை தானே இழந்து ஒரு வாழ்க்கையை தேவையா… அப்படி ஒரு வாழ்க்கை தேவையே இல்லை. யாருமே இல்லாமல், என்னால தனியாக இந்த உலகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. இதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றுள்ளார்.
