Touring Talkies
100% Cinema

Monday, April 14, 2025

Touring Talkies

தீவிர வொர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த ரஜிஷா விஜயன்… வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரைப்படமான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ படத்தில் தனுஷ் உடன் நடித்ததன்மூலம் தமிழ் சினிமாவிலும் தனது அறிமுகத்தை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ‘ஜெய்பீம்’, ‘சர்தார்’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்ததால் பிரபலமடைந்தார். ரஜிஷா விஜயன் கேரளாவைச் சேர்ந்தவர். மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து, தனது இயல்பான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதை வென்று, முன்னணி கதாநாயகியாகத் திகழ்கிறார். தற்போது ‘சர்தார் 2’ மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘பைசன்’ என்ற படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில், ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவருடன் காதல் உறவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, இந்த தகவலை உறுதிப்படுத்தியது. சமீபத்தில் ரஜிஷாவுக்கு உடல்நிலை பிரச்சனைகள் ஏற்பட்டதால், அவரது எடை அதிகரித்தது.

இந்தநிலையில், அவரது உடற்பயிற்சியாளர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படத்தில், ரஜிஷா விஜயன் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம்மாக மாறியிருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், “அட இது ரஜிஷாவா? ஆளே மாறிட்டாரே!” என ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை முன்னோக்கி மாற்றிக் கொண்டிருப்பது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News