Touring Talkies
100% Cinema

Monday, April 14, 2025

Touring Talkies

தனது மகனின் சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து குடும்பத்துடன் வீடு திரும்பிய பவன் கல்யாண்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னேவா. அவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர்.

2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஹைதராபாத்தில் தான் வசித்து வந்தனர். கடந்த வருடம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தனது குடும்பத்தினரை சிங்கப்பூர் அனுப்பிவிட்டார் பவன் கல்யாண். அங்குள்ள பள்ளிகளில் அவரது குழந்தைகள் படித்து வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மார்க் சங்கர் படித்த பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் மார்ச் சங்கர் காயமடைந்தார். மகனின் சிகிச்சைக்குப் பின் தனது குடும்பத்தாருடன் நேற்று ஹைதராபாத் திரும்பினார் பவன் கல்யாண்.

- Advertisement -

Read more

Local News