டான்ஸர், கோச்சர், டிரெய்னர், ஆக்டர், ஆங்கர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வரும் இவர் வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார் நடிகை ஜனனி பிரபு.சிங்கப்பூரில் நடக்கவுள்ள சர்வதேச நீச்சல் போட்டியில் மெடல் வெல்ல தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறார் . வெள்ளித்திரையை பற்றி யோசிக்க நேரமில்லை. அங்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரவுண்ட் வருவேன். விளையாட்டு வீராங்கனையாக, பயிற்சியாளர் கேரக்டர்களில் நடிக்க ஆசை. நாம் என்ன ஆக வேண்டும் என்பதற்காக எடுத்து கொண்ட காரியங்களில் எந்த சவால் வந்தாலும் மனம் சோர்ந்து விடக்கூடாது. விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்தால் யாரும் சாதிக்கலாம். இதை இன்றைய இளையதலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
