கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. இதில் அவருடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் பிந்தைய தயாரிப்பு பணிகள் (போஸ்ட் புரொடக்ஷன்) நடைபெற்று வருகிறது. இந்த படம் மே 1ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக ‘கனிமா’ எனும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘ரெட்ரோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வேண்டும் என படக்குழு அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கோவையில் பங்கேற்று நடித்து வருகிறார் என்பதால், அவர் இசை வெளியீட்டில் கலந்துகொள்ள வருவாரா என்பது தற்போது சந்தேகமாக உள்ளது.