Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

வெங்கி அட்லூரி – சூர்யா கூட்டணியில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்… யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது தனது 44-வது படமான ‘ரெட்ரோ’வில் நடித்துக் கொண்டு முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஒரு பீரியடிக் கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 45-வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனுடன், சூர்யாவின் 46-வது திரைப்படத்தை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்காலிகமாக இப்படத்திற்கு ‘சூர்யா 46’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கவுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘சூர்யா 46’ திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நிமிஷ் ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இதற்கு முன்பு ‘லக்கி பாஸ்கர்’ படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News