Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே ரிலீஸ் எப்போது? கசிந்த புது அப்டேட்! #LIK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார்.படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. அந்த கட்ட வேலைகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் மிகுந்த வேகத்துடன் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் இன்னும் இரண்டு வாரங்கள் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இப்படம் வெளியாகும் தேதி குறித்து அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, ‘எல்.ஐ.கே’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News