பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவந்த ‘கனிமா…’ எனும் பாடல், சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தப் பாடலைப் பயன்படுத்தி பலரும் ரீல்ஸ் வீடியோக்கள் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் நடித்த நடிகை சுவாசிகா கூட இந்த டிரெண்டில் கலந்துகொண்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கனிமா…’ பாடலுக்கு நடமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2009ஆம் ஆண்டு வெளியான ‘வைகை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுவாசிகா. பின்னர், 2012ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த தமிழ் படங்களிலும் அவர் நடிக்கவில்லை. சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் மீண்டும் திரைக்கு வந்தார். தற்போது, சூர்யாவின் 45வது திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.