சேரன் இயக்கி, ஹீரோவாக நடித்த கிளாசிக் சூப்பர் ஹிட் படம் ‘ஆட்டோகிராப்’. 2004ல் வெளியான இந்த படத்தில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஆட்டோகிராப் மாதிரியான பல நினைவுகள் இருக்கும். இந்தப்படம் அப்படி ஒரு படமாக வெளிவந்தது.
இந்தப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை கடந்த நிலையில் சமீபத்தில் புத்தம் புதிய பொலிவுடன், இந்தக்காலத்திற்கு ஏற்றபடி மெருகேற்றி ரீ-ரீலீஸ் செய்யவதாக அறிவித்தனர். அதேசமயம் படத்தின் வெளியீட்டு தேதியை கூறாமல் இருந்தனர். இப்போது இத்திரைப்படம் வருகின்ற மே16ம் தேதி அன்று தமிழகமெங்கும் ரீ-ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.