விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார். இதில், அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், “அடுத்த படத்திலும் அஜித் sir உடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தால், அதைவிட பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார். இதனால், கார் பந்தயம் முடிந்ததும், அஜித் தனது அடுத்த படத்துக்குத் தயாராகும், அதைப் படமாக்கும் வாய்ப்பு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக, சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு படங்களில் நடித்த அஜித், பின்னர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.