பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் முடிவுக்கு வந்த நிலையில், குடும்பத்துடன் நேரத்தை கழித்து வரும் சுஜிதா, பிடித்த இடங்களை சுற்றி பார்த்து வியந்து ரசித்து வருகிறார். அந்த வகையில், அந்தமான் சென்றிருக்கும் அவர், அங்குள்ள பிரபலமான செல்லுலார் ஜெயிலுக்குள் சென்று சுற்றி பார்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். காலா பானி சிறைச்சாலைகளிலேயே கொடூரமான சிறைச்சாலை செல்லுலார் ஜெயில் தான். பிரிட்டிஷ் காலத்தில் மிகக்கொடூரமான முறையில் இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற வரலாறும் இருக்கிறது. தற்போது இந்த சிறைச்சாலையை மக்கள் சுற்றிப்பார்க்கும் சுற்றுலாத்தலாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
