Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

கதையின் நாயகனாக நடிக்கும் சமுத்திரக்கனி… பூஜையுடன் தொடங்கிய ‘பைலா’ படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘நாடோடிகள்’ படத்தை இயக்கி பிரபலமான சமுத்திரக்கனி, அதன் பிறகு பல படங்களை இயக்கினார். பின்னர் நடிகராக மாறி, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சில படங்களில் கதாநாயகனாகவும் தோன்றியுள்ளார்.

 சமீபத்தில், பாலா இயக்கி, அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், தற்போது ஒரு புதிய படத்தில் சமுத்திரக்கனி மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ரம்யா நம்பீசன், ராஜ்குமார், இலங்கையைச் சேர்ந்த நடிகை மிச்சலா, யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, ஆண்ட்ரூ, என்.இளங்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.  

இப்படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார். கலா தியேட்டர்ஸ் சார்பில் ராசய்யா கண்ணன் தயாரிக்கிறார். வசனத்தை விஜி எழுதுகிறார். படத்துக்கு ‘பைலா’ என்று பெயர் வைத்துள்ளனர். சனுகா இசையமைக்க, ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News