Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

ஜிவி பிரகாஷின் BLACK MAIL… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடும் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார், பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். பல வெற்றிப் பாடல்களையும் அளித்து வருகிறார். இசையில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘இட்லி கடை’, ‘குட் பேட் அக்லி’, ‘எஸ்.கே.25’ உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். 

சமீபத்தில் வெளியான அவரது 25வது படமான ‘கிங்ஸ்டன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் பின்னணி இசை முடிந்ததாக ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.‘பிளாக்மெயில்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ படங்களை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

இந்நிலையில், மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை மாலை 6:03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு பகிர்ந்துள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- Advertisement -

Read more

Local News