Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

குட் பேட் அக்லி பின்னணி இசைப் பணிகள் நிறைவு… சூப்பர் டூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரவிருக்கும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரையிடப்படவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தின் இசை தொடர்பான அப்டேட்டை தற்போது ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தப் படத்தின் பின்னணி இசை வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும், படம் வெளியீட்டிற்காக தயார் நிலையில் உள்ளதாகவும், அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News