Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழு… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய பிறகு, அவர் இயக்கத்தை தவிர்த்து நடிப்பில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’ போன்ற திரைப்படங்கள் வரவேற்பை பெற்றன. மேலும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள Freedom திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது சசிகுமார் ‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ‘குட் நைட்’ படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இப்படத்தில் சசிகுமாருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக டீசரில் சசிகுமார் மற்றும் சிம்ரன் பேசும் இலங்கை தமிழ் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.இந்த நிலையில், ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News