Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தி பாராட்டிய நடிகர் சிவக்குமார் மற்றும் சூர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனில் இடம்பெற்ற சிம்பொனி இசை நிகழ்ச்சியை மிகுந்த பிரம்மாண்டத்துடன் வழங்கி, நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். இதன் தொடர்ச்சியாக, உலகம் முழுவதும் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று, இளையராஜா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, அவரிடமிருந்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். இதுவரை பலரும் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அன்னக்கிளி திரைப்படத்தின் நாயகனாக நடித்த பிரபல நடிகர் சிவகுமார், சென்னையில் இளையராஜாவை நேரில் சந்தித்து, அவருக்கு தனது ஆழ்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், அவரை சிறப்பிக்கும் விதமாக, தங்கச் சங்கிலியை அணிவித்து கவுரவித்தார். இந்த சந்திப்பில் சிவகுமாரின் மகனும் முன்னணி நடிகருமான சூர்யா, மகளும் பாடகியுமான பிருந்தா ஆகியோரும் உடன் இருந்து, இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

- Advertisement -

Read more

Local News