Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமசிவன் ஃபாதிமா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விமல் நடித்துள்ள புதிய திரைப்படம் பரமசிவன் ஃபாதிமா.இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு குடிமகன், பெட்டிக்கடை, பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இந்நிலையில், படக்குழு இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் ஒரு மலைக்கிராமத்தில் வாழும் இரு மதத்தினருக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

இந்நிலையில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். மேலும், மலைப்பகுதியில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனி கிராமங்கள் இருக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே மத கலவரம் உருவாகிறது. இப்படத்தின் டிரெய்லரில் இதேபோன்ற முக்கியமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News