Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் பாசில் ஜோசப் நடிக்கிறாரா? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து, படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையின் தலைநகரான கொழும்பில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

அங்கு, மதுரை ரயில் நிலையம் தொடர்பான சில முக்கிய காட்சிகள் மற்றும் தில்லியில் நடக்கும் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, பழைய காலத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘இந்தி வாழ்க’ மற்றும் ‘டெல்லி ரயில் நிலையம்’ என பெயர் பொறிக்கப்பட்ட ஓர் பழமைவாய்ந்த பேருந்து படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகரான பாசில் ஜோசஃப் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பல பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், பாசில் ஜோசஃப் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் இப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News