Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘கூலி’ படக்குழுவுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து அவர் கார்த்தி நடித்த ‘கைதி’, விஜய் நடித்த ‘மாஸ்டர்’, கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற புதிய கான்செப்ட் அறிமுகப்படுத்தி, அதற்குள் தொடர்ந்து பல படங்களை உருவாக்கி வருகிறார். இதன் காரணமாகவே, அவர் இயக்கும் திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான ‘கூலி’ தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்துடன் சேர்ந்து, சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்த நாளை ‘கூலி’ படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலரும் அவருடன் இருந்தனர்.

- Advertisement -

Read more

Local News