ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். இதன்மூலம் சல்மான் கான், 10 ஆண்டுகளுக்கு பிறகு சஜித் நதியாத்வாலா உடன் இணைந்து பணியாற்றுகிறார்.
‘சிக்கந்தர்’, வரும் ரம்ஜான் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலாக ‘பாம் பாம் போலே’ இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், ‘தீனா’, ‘ரமணா’, ‘கத்தி’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மதராசி’ படத்தையும் இயக்கி வருகிறார்.