தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் சாம் சிஎஸ். ‘கைதி’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றதன் மூலம், தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர். இவரின் பின்னணி இசைக்காகவே ரசிகர்கள் இவருக்கு உண்டு.

கடந்த ஆண்டு, தெலுங்கில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கும் பின்னணி இசையமைத்திருந்தார். அந்த இசையும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், புஷ்பா 2 படத்திற்கு பின்னர், ஜாக் என்ற புதிய தெலுங்கு படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இப்படத்தை ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்குகிறார், இதில் சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடிக்கிறார்.
கோலிவுட்டில் இருந்து டோலிவுட் சென்று படங்களுக்கு இசையமைத்து சாதித்தவர்களான, அனிருத், ஜிவி பிரகாஷ் ஆகியோர் வரிசையில் தற்போது சாம் சிஎஸ்-ம் இணைய இருக்கிறார்.