“பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமான நகுல், “காதலில் விழுந்தேன்” படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாக்க மூக்க’ பாடல் பெரும் வெற்றியைப் பெற்றது.

அதன் பின்னர், “மாசிலாமணி”, “கந்தக்கோட்டை” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால், சில படங்கள் எதிர்பார்த்தளவில் வெற்றியடையாததால், அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதற்கிடையில், “வல்லினம்”, “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” போன்ற திரைப்படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன.

கடைசியாக, “வாஸ்கோடகாமா” படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், நகுல் சமீபத்தில் தனது புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில், அவர் ஒரு குத்துச்சண்டை வீரரைப் போன்ற கட்டுமஸ்தான தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால், இது அவரது புதிய படத்திற்கான தோற்றம் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.