நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்குப் பிறகு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதனுடன், வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், இது மாருதி கார்களின் புகழ்பெற்ற 796cc இன்ஜின் உருவாக்கப்பட்டதற்கான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பாக்யஸ்ரீ போஸ் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.