ஜோதிகா தற்போது அளித்துள்ள பேட்டியில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தோல்வி படமாக மாறிய கங்குவா படம் குறித்து பேசியுள்ளார். அதாவது கங்குவா படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்தமாக படத்திற்கு மொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்து உள்ளார்கள். ஆனாலும் சில மோசமான படங்களுக்கு கூட இந்த அளவிற்கு விமர்சனங்கள் வந்தது கிடையாது. இந்தப் படத்தை இந்த அளவுக்கு மோசமாக ஊடகங்கள் விமர்சித்தது பாதிப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது வருத்தமாக இருந்தது என்றுள்ளார் .
