சினிமாவில் அவ்வப்போது பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் மலையாள சினிமாவில் முதல் முறையாக பெண்கள் மட்டுமே முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களாக இணைந்து பணியாற்றியுள்ள ‘மும்தா’ என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது. கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தை பர்ஷானா பினி அசாபர் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், கலை என அழைத்து தொழில்நுட்ப கலைஞர்களுமே பெண்கள் தான்.அதே சமயம் படத்தில் வழக்கம் போல ஆண், பெண் என அனைத்து கலைஞர்களும் இதில் நடித்திருக்கின்றனர். காசர்கோடு பகுதியை சார்ந்தவர்களின் வாழ்வியலாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மகளிர் தினமான மார்ச் எட்டாம் தேதி நிறைவு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 20 நாட்களுக்குள் இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார்கள் என்பதும் ஒரு ஆச்சர்யம் தான்.
முதல் முறையாக பெண்கள் மட்டுமே தொழில்நுட்ப கலைஞர்களாக இணைந்து பணியாற்றியுள்ள ‘மும்தா’ திரைப்படம் !

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more