2010 ஆம் ஆண்டு, சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்ததற்காக, வசுந்தரா சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

அதன்பிறகு, ‘போராளி’, ‘துணிக துணிக’, ‘தலைக்கூத்தல்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தார். சமீபத்தில், சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்ததாக, அவர் சுனில் இயக்கும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், வசுந்தரா தனது நடிகை பயணத்திலிருந்து எழுத்தாளர் வாழ்க்கையைத் தேர்வு செய்துள்ளார். தற்போது, ‘தி அக்கியூஸ்ட்’ என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார். அடுக்குமாடியில் நடந்த மர்மமான கொலையை மையமாகக் கொண்டு இந்த கிரைம் நாவல் எழுதப்பட்டுள்ளது.