தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானாலும், தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

தற்போது, சூர்யாவுடன் இணைந்து ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக பூஜா, தனது சொந்தக் குரலில் பேசியுள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக, காமிக்ஸ் வடிவிலான சில போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பூஜா ஹெக்டே இதுவரை எந்த ஒரு மொழித் திரைப்படத்திலும் தனது குரலில் பேசியதில்லை. ஆனால், இந்தப் படத்திற்காக முதல் முறையாக தமிழில் டப்பிங் செய்துள்ளார். பூஜா, தமிழில் பேசி நடிக்க ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து பயிற்சி எடுத்திருக்கிறார். இப்படம், அவருக்கு பெருமை சேர்க்கும் படமாக அமையும் என படக்குழு நம்பிக்கையுடன் இருக்கிறது.