நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் உருவாகும் தகவல், அதற்கான சிறப்பு வீடியோவுடன் இந்த வருட பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது.
2023-ம் ஆண்டில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், உலகளவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். அந்த எதிர்பார்ப்பை, ரஜினிகாந்த்-நெல்சன் கூட்டணி உறுதிப்படுத்தி, மீண்டும் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது

நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதால், ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர்கள் உடனே தொடங்கிவிட்டனர். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.