எழுத்தாளர் அஜயன் பாலா இயக்கும் படம் ‘மைலாஞ்சி’. இந்தப் படத்தை டாக்டர் பா. அர்ஜுனன் தயாரிக்க, ‘கன்னி மாடம்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கிரிஷா குருப் நடிக்கிறார்.

இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம்புலி, மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தாட்ஷா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான ஒளிப்பதிவை செழியன் மேற்கொள்கிறார், மேலும் இசைமாந்த்ரன் இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இயக்குநர் அஜயன் பாலா இப்படம் குறித்து கூறும்போது,, உலகில் கோடிக்கணக்கான காதல்கள் உருவாகி இருக்கின்றன. இப்படமும் அத்தகைய ஓர் அற்புதமான காதல் கதை. நாயகன் ஒரு பறவைகளை புகைப்படம் எடுக்கும் இயற்கை ஆர்வலர். கதையின் மையக்கரு, “மைலாஞ்சி” என்ற அபூர்வ பறவையை விற்பனை செய்யும் நாயகிக்கு மற்றும் அந்த நாயகனுக்குள் உருவாகும் காதலே.
ஆனால், இந்த காதலின் நடுவில் இன்னொரு பெண் வரும்போது ஏற்படும் உணர்ச்சிப் பேரழிவுகளும், மாறுபட்ட உணர்வுகளும் தான் படத்தின் திரைக்கதை “இதை சாதாரண முக்கோண காதல் கதை என்று கூறிவிட முடியாது. காதலின் அடுத்த நிலையை சொல்லும் ஒரு மென்மையான, உணர்வுபூர்வமான காதல் கதை இது.மூன்றாவது பாத்திரமாக வரும் அந்த பெண் யார்? அந்த பாத்திரத்தில் நடித்திருப்பது யார்? என்பதைக் குறித்துவே இப்போது சஸ்பென்ஸ் வைத்திருக்கிறோம்!” என்று கூறினார்.