Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘எமகாதகி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ஊர்தலைவராக இருக்கும் ராஜீ ராஜப்பன், தனது மகள் ரூபா கொடுவாயூரை கோபத்தின் காரணமாக கடுமையாக அடிக்கிறார். இதன் விளைவாக, ரூபா மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த தற்கொலையை மறைக்க, மகள் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக ஊர் மக்கள் நம்பும்படி செய்து, இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். ஆனால், சடலத்தை தூக்க முயன்றபோது அதனை நகர்த்த முடியவில்லை. இறப்பு வீட்டிற்கு வந்த அனைவரும் கயிறு கட்டி இழுத்தும் கூட ரூபாவின் உடல் நகர மறுக்கிறது. இதன் பின்னணி என்ன? ரூபாவின் சடலம் நகர மறுப்பதற்கு காரணம் என்ன? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

நாம் பல கிராமங்களில், நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த சிலரின் சடலங்களை, வீட்டில் இருந்து வெளியே எடுக்க பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இந்த உண்மை சம்பவத்தை கதை கருவாக எடுத்துக்கொண்டு, வித்தியாசமான முறையில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இறந்த பெண் பாடையில் ஏற மறுத்து, அசையாமல் இருப்பதை அடிப்படையாக வைத்து, பரபரப்பை ஏற்படுத்தும் கதையாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

மருத்துவம் படித்து, தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ரூபா கொடுவாயூர், தமிழ் சினிமாவில் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் 90% காட்சிகளில் பிணமாகவே நடித்துள்ளார். அவர் மருத்துவர் என்பதால், நீண்ட நேரம் மூச்சை தடுத்து, திரையில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். காதலி இறந்ததை பார்த்து தவிக்கும் காட்சிகளில் நாகந்திர பிரசாத் தனது சங்கீதத்தால் சிறப்பாக உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில், அப்பாவாக நடித்துள்ள ராஜீ ராஜப்பன், அம்மாவாக வரும் கீதா கைலாசம், அண்ணனாக நடித்துள்ள சுபாஷ் ராமசாமி, அண்ணியாக நடித்துள்ள ஹரிதா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை உண்மையாக வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் சிறப்பான நடிப்பால், கதைக்கு கூடுதல் உயிர்ப்பு கிடைத்துள்ளது.ஜெசின் ஜார்ஜ் இசையில் பாடல்கள் ரசிக்கத்தக்க அமைந்துள்ளன. ஆனால் பின்னணி இசையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். சுஜித் சாரங் ஒளிப்பதிவு, படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News