Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மலையாளத்தில் ஹிட் அடித்த ஆபிசர் ஆன் டூட்டி திரைப்படம் தமிழில் வெளியாகிறது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் குஞ்சாக்கோ போபன் நடிப்பில், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ‘ஆபிஸர் ஆன் டியூட்டி’ திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியான பிறகு, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநராகிய ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் குஞ்சாக்கோ போபனுடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை ‘கன்னூர் ஸ்குவாட்’ புகழ் ராபி வர்கீஸ் ரா கவனித்துள்ளார். இசையமைப்பை ஜேக்ஸ் பிஜோய் செய்துள்ளதோடு, படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொண்டுள்ளார்.

மலையாளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால், படக்குழு இதனை தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. தெலுங்கு மொழியில் படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ளதோடு, தமிழில் இது மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

- Advertisement -

Read more

Local News