தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தார். ஆனால், கடந்த ஆண்டு அவர் நடித்த ‘அரண்மனை 4’ திரைப்படம் 100 கோடி வசூலை கடந்த வெற்றிப் படமாக இருந்தாலும், அதன்பிறகு தமிழில் அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது, அவர் ‘ஒடேலா 2’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.

தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரது நெருக்கமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் தற்போது, இருவரும் உறவை முடித்து நண்பர்களாக மட்டுமே தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, இருவரும் தங்களது பிரிவைப் பற்றிய எந்த கருத்துகளையும் பகிரவில்லை.
2023 ஆம் ஆண்டு தங்கள் காதல் குறித்து தமன்னா திறந்த மனதுடன் பேசியிருந்தார். அதேபோல், அவர்களது பிரிவு பற்றியும் அவர் விளக்கம் தருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். திருமணத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த திடீர் பிரிவு ஏற்பட காரணம் என்ன என்பது தற்போது தெரியவில்லை.