மலையாள நடிகர் துல்கர் சல்மான், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரின் கடைசி வெளியான “லக்கி பாஸ்கர்” படம், பெரும் வெற்றி பெற்றது.

அடுத்து, “ஆர்.டி.எக்ஸ்” படத்தின் இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக, இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன. மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை துல்கர் சல்மான் தயாரிக்கவும் உள்ளார், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு “ஐ யம் கேம்” என பெயரிட்டு, முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்துடன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.