ஹிந்தி திரையுலகில் பல படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப், தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு, தளபதி விஜய் நடித்த ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, மற்றும் ‘விடுதலை பார்ட் – 2’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கு சினிமாவில் ‘டகாய்ட்’ என்ற புதிய படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் அதிவி சேஷ் கதாநாயகனாக, மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.இந்த படத்தில் அனுராக் காஷ்யப், இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், அய்யப்ப பக்தராக இருக்கும் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், இந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தி, என இரண்டு மொழிகளில் அவர் நடித்திருக்கிறார்.
இதுகுறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது,
“ஒரே கதாபாத்திரத்துக்கு இரண்டு மொழிகளில் சமமான தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் சவாலான விஷயம். இருப்பினும், இந்த கதாபாத்திரத்தை நான் மிகுந்த ஆர்வத்துடன், மகிழ்ச்சியுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.