Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஜன நாயகன் பட அப்டேட் கொடுத்த நடிகை ப்ரியாமணி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி ‘பருத்திவீரன்’ படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். அதைத் தொடர்ந்து இவர் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போதைய இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் ஒரு பேட்டியில் ஜனநாயகன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை பிரியாமணியிடம் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகிவிட்டது. எனக்கும் அவருக்கும் உள்ள காம்பினேஷன் காட்சிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News