Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

Comfort Zone-ல் இருந்துகொண்டே இருந்தால் வளர்ச்சி பெற முடியாது – நடிகை ரகுல் பிரீத் சிங் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துவருகிறார். தமிழில் ‘தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான், தேவ், என்ஜிகே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜய் தேவ்கன், ஆர். மாதவனுடன் இணைந்து ‘தே தே பியார் தே 2’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அவருடைய நடிப்பில் ‘இந்தியன் 3’ விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்துள்ளார். பழக்கப்பட்ட சூழலில் இருந்துகொண்டே வளர்ச்சி பெற முடியாது. சவுகரியமான பழக்கப்பட்ட இடம் நம்முடைய மிகப்பெரிய எதிரி. அந்த இடம் வசதியானதாக இருக்கலாம், ஆனால் வளர்ச்சி ஏதும் இருக்காது.

அதிகாலையில் எழுந்து ஒரே மாதிரியான விஷயங்களை தொடர்ந்து செய்வது நம்மை சோம்பேறியாக மாற்றுகிறது. புதிய சவால்களை ஏற்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற, நாம் பழக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியே வர வேண்டும். கடினமான விஷயங்களை முயற்சிக்க வேண்டும்.

நான் நடித்துள்ள அண்டாரா என்ற கதாபாத்திரம் மிக வலிமையான பெண். தன்னைத்தானே நேசிக்கும், விளையாட்டுகளை விரும்பும், புதிதாக எதையாவது செய்ய ஆசைப்படும் சிறப்பான பெண். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாத்திரம் என அவர் கூறியுள்ளார்.இவர் தற்போது ‘மேரே அஸ்பண்ட் கி பிவி’ என்ற முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் முதாசர் அசிஜ் இயக்கத்தில் பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது. படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்படும். கடந்தாண்டு பிப்ரவரியில், நீண்ட கால காதலர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News