சமீபத்தில் வெளியான ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, ரவி மோகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், அவர் 2025 ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நேரம் மிக வேகமாக செல்லத்தொடங்கிவிட்டது என்பதை குறிப்பிடுகிறார். அவர் தனது உரையில், “இது ஒரு புதிய ஆண்டு, நீங்கள் எதை செய்தாலும், அதை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், பொறுமையாகவும் செய்யுங்கள்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158418.png)
அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் மட்டுமே, வாழ்க்கை இனிமையாக இருக்கும். அதேபோல், எதை செய்தாலும் அதில் அன்பும் கருணையும் இருக்க வேண்டும்” என்று தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார்.