கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, தனது ஆரம்பக் காலங்களில் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியை தயாரித்தது. நடிகர் ஆர்யா இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளையாக, 16 பெண்கள் மணப்பெண்களாக கலந்து கொண்டு, ஒரு சுயம்வரம் நிகழ்ச்சி போல் ஒளிபரப்பினர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158415-1024x961.png)
இந்த நிகழ்ச்சியில், அபர்ணதி ஆர்யாவிடம் மிகவும் நெருக்கமாகவும், ஆர்யா தனக்குத்தான் சரியான வாழ்க்கைத் துணை என அந்நிகழ்ச்சியில் தனது அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தார்.நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் அபர்ணதி எலிமினேட் செய்யப்பட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகும், இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் ‘6ya’ என வைத்து, அதை இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறார். இதற்கிடையில், அபர்ணதி சில திரைப்படங்களில் நடித்து, நல்ல நடிகையாக பெயர் பெற்றுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158413-1024x821.png)
சமீபத்தில், ஒரு பேட்டியில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆர்யாவை சந்தித்தீர்களா? என்று கேட்கப்பட்டபோது, “8 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு தயாரிப்பாளர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்யாவை சந்தித்தேன். அவர் என்னிடம் ‘ஹாய் அபர்ணதி, எப்படி இருக்கிற? நன்றாக இருக்கிறாயா?’ என்று கேட்க, நானும் ‘நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?’ என்று பதிலளித்தேன்.
நாங்கள் சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த நிகழ்ச்சியின் போது, நான் ஆர்யாவிடம் ‘உன் பொண்டாட்டி டா’ என்று கேலி செய்த நேரங்கள் உள்ளன. ஆனால், அது அனைத்தும் விளையாட்டுக்காகத்தான்! ஆனால், இப்போது அந்த நிகழ்வுகள் எல்லாம் என் நினைவுகளில் நல்ல தருணமாகவே இருக்கும். அந்த உறவே போதும்!” என்று அபர்ணதி தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் நடிகையாக வெற்றியை நோக்கி பயணிக்கிறார் அபர்ணதி. தற்போது, ‘வெஞ்சன்ஸ்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருடைய ரசிகர்கள், “அபர்ணதி விரைவில் முன்னணி நடிகையாக மாறி, ஆர்யாவுடன் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்வார்” என அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.