‘எதிர்நீச்சல்’ தொடரின் முதலாவது சீசனில் மதுமிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருடன் அவரது தோழியுமான வைஷ்ணவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரது நட்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்ஸ்டாகிராமில் இவர்கள் அடிக்கும் லூட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படுகிறது.வைஷ்ணவி தற்போது ‘புது வசந்தம்’ தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். மதுமிதா விஜய் டிவியில் ‘அய்யனார் துணை’ என்கிற தொடரில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், தோழிகள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158077.png)