தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் இசையை அனிருத்த் முதன்முறையாக அமைத்து, அதில் இடம்பெற்ற Why This Kolaveri பாடல் உலகளவில் பெரும் வெற்றியைப் பெற்றது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158011.jpg)
அதன்பிறகு, ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியடைந்தது. இதையடுத்து, விஷ்ணு விஷால், விக்ராந்த், மேலும் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படமும் வர்த்தக ரீதியாக அமோக வெற்றியை பெற முடியாமல் போனது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158012-1024x576.jpg)
இந்த அனுபவங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினி, சித்தார்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க விரும்பி, தயாரிப்பாளர்களை நாடினார். ஆனால், அவர் கூறிய கதையை தயாரிக்க எவரும் முன்வராததால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அந்த நிறுவனத்தின் கீழ் அடுத்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். புதிய நடிகர்கள் நடிக்கும் இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.